கம்போடியா, 09 டிசம்பர் (பெர்னாமா) -- தாய்லாந்துடனான மோதல் காரணமாக எல்லைப் பகுதிகளில் உள்ள 377 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கம்போடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒடார் மின்ச்சே, ப்ரெய விஹெர் மற்றும் பண்ட்டே மின்ச்சே பகுதிகளில் 78,585 மாணவர்களும் 3,197 ஆசிரியர்களும் கல்வியைத் தொடர முடியாமல் தவிப்பதாக அந்நாட்டின் கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு கூறியது.
மேலும், தாய்லாந்தின் இறையாண்மை மற்றும் வட்டார ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க கம்போடியாவின் எல்லையில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து இருக்கும் என்று அதன் வெளியுறவு அமைச்சும் தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக தொடர்ந்து வரும் இந்த எல்லைப் பிரச்சனை கடந்த ஜூலை மாதம் ஐந்து நாள்கள் சண்டையாக வெடித்ததில் பல உயிர்கள் பலியாகின.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]