பொது

நேம்வி-இன் போலீஸ் ஜாமீன் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

13/12/2025 05:20 PM

சுங்கை பீசி, டிசம்பர் 13 ( பெர்னாமா) -- மற்றுமொரு நிலவரத்தில், நேம்வி என்று அனைவராலும் அறியப்படும் பிரபல பாடகர் வே மெங் சீ-யின் ஜாமீன், கடந்த வியாழக்கிழமை தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 11-ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகப் பிரபலமான 33 வயதுடைய சியே யுன் சின் என்ற தைவான் நாட்டுப் பெண்ணின் மரணம் தொடர்பில், (Toksikologi) மற்றும் பிரேச பரிசோதனை அறிக்கைகளுக்குப் போலீஸ் இன்னும் காத்திருப்பதால், ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டதாக, கோலாலம்பூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்சுஸ் கூறினார்.

''இன்னும் விசாரணையில் உள்ளது. முன்னதாக குறிப்பிட்டது போல நச்சுயியல் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அது நிறைவடைய சில மாதங்களாகும். நாங்கள் முன்பு போலவே தொடர்வோம். விரைவாக வேதியியல் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். இல்லையெனில் நாங்கள் உத்தரவாதத்தை மீண்டும் நீட்டிப்போம்'' என டத்தோ ஃபடில் மர்சுஸ் கூறினார்.

இன்று, கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அதனை கூறினார்.

இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 315-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)