புத்ராஜெயா, டிசம்பர் 17 (பெர்னாமா) -- மடானி அரசாங்க கொள்கை அமலாக்கம் விரைவாகச் செயல்படுவதை உறுதிசெய்ய அமைச்சரவை உறுப்பினர்கள் தொடர்ந்து கட்டொழுங்குடன் பணியாற்ற வேண்டும்.
அனைத்து அமைச்சர்களும் பணிவுடனும் நேர்மையுடனும் பணியாற்றுவதோடு தாமதமோ அல்லது எந்தவித காரணங்களையோ தெரிவிக்காமல் அவர்களின் சேவை மக்களைச் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்தப் புதிய அமைச்சரவை பெரும் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் சமூகத்தின் ஒவ்வொரு நிலையினரின் விருப்பத்தையும் தேவையையும் மொழிபெயர்க்கும் ஆற்றல் உள்ள ஓர் அமைச்சரவை என்று டத்தோ ஸ்ரீ அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
இன்று புதிய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட வேளையில் மடானி அமைச்சரவையின் கூட்டமும் புத்ராஜெயாவில் நடைபெற்றது.
அமைச்சரவை மாற்ற அறிவிப்பிற்குப் பின்னர் நடைபெறும் மடானி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)