சிலாங்கூர், டிசம்பர் 18 (பெர்னாமா) -- நேற்றிரவு கிள்ளான் தாமான் செந்தொசா-வில் ஏற்பட்ட கைக்கலப்பின் போது உள்ளூர் ஆடவர் ஒருவர் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து இரவு மணி 11.10-க்கு தங்கள் தரப்பிற்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறினார்.
அச்சம்பவத்தில் 34 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலைச் செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஷாசெலி கஹார் குறிப்பிட்டார்.
மேலும், சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாவும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
இதனிடையே விசாரணைக்கு உதவ சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் திரையில் காணும் எண்ணில் தொடர்புக் கொண்டு புகாரளிக்கலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)