ஜார்ஜ்டவுன், டிசம்பர் 19 (பெர்னாமா) -- ஊடகம், ஒருமைப்பாட்டின் பாதுகாவலர் என்றும், கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒரு முக்கிய பாலம் என்றும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாராம் சூட்டியுள்ளார்.
மேலும், தகவலறிந்த மற்றும் ஒருங்கிணைந்த சமூகங்களை உருவாக்குவதற்கு ஊடகம் இன்றியமையாதது என்றும் அவர் விவரித்தார்.
நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் மலேசிய மடானியின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, ஊடகங்கள் ஒரு முக்கிய பங்காளியாக செயல்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
"மலேசியாவைப் பொருத்தவரை, ஊடகங்கள் பொது வாழ்க்கையின் ஒரு முக்கியத் தூணாக உள்ளன. பத்திரிக்கை ஒருமைப்பாட்டின் பாதுகாவலராகவும், கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலமாகவும் உள்ளது. மேலும், இது தகவலறிந்த மற்றும் ஒருங்கிணைந்த சமூகங்களை வளர்ப்பதில் இன்றியமையாத பங்கை வகிக்கிறது. மலேசிய மடானி தொலைநோக்கு பார்வையை முன்னேற்றுவதில், ஊடகம் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, அறிவுப் பகிர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் ஒரு பங்காளியாக உள்ளது,'' என டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வெள்ளிக்கிழமை பினாங்கு ஜார்ஜ் டவுனில் நடைபெற்ற உலக சீன மொழி பத்திரிகை கழகத்தின் 58வது ஆண்டு மாநாட்டில் அன்வார் உரையாற்றினார்.
மலேசியாவில் சீன மொழி ஊடகங்களின் மீள்தன்மை மற்றும் கலாச்சார பங்களிப்பை இந்த மாநாடு வெளிப்படுத்துவதாக அன்வார் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)