கோலாலம்பூர், டிசம்பர் 19 (பெர்னாமா) -- ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1MDB வழக்கு தொடர்பில், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தரப்பு வழக்கறிஞர்கள் ஊடக அறிக்கையில் வெளியிட்டிருந்த அனைத்து விவகாரங்களும் அவ்வழக்கு விசாரணை காலக்கட்டம் முழுவதிலும் விவாதிக்கப்பட்டு விட்டதாக தேசிய சட்டத்துறை, ஏஜிசி தெரிவித்தது.
2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி 2025-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவ்விவகாரங்கள் எழுப்பப்பட்டதாக ஏஜிசி குறிப்பிட்டது.
ஏஜிசி சுதந்திரமாகவும், நியாயமாகவும், நேர்மையுடனும் வழக்குகளை நடத்துவதற்கு உறுதி கொண்டுள்ளதாக அத்துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நீதி நிலைநாட்டப்படுவதையும், பொது நலன் எப்போதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக, சட்டம் மற்றும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே எப்போதும் முடிடுகள் எடுக்கப்படுவதாக அத்துறை தெரிவித்துள்ளது.
1MDB வழக்கின் தீர்ப்பை 2025ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி, நீதிபதி டத்தோ கோல்லின் லோரன்ஸ் செகூரா வழங்குவார்.
நஜிப்பைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷஃபீ அப்துல்லா, நேற்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் பல பிரச்சினைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)