கோலாலம்பூர், டிசம்பர் 19 (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட அவதூறு வழக்கில், தமக்கு எதிராக விதிக்கப்பட்ட சம்மன் தொகையைச் செலுத்த பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்றது தொடர்பான வணிக விவரங்களில் மாற்றங்களை அமலாக்கத் தரப்பினருக்கு சமர்ப்பிக்கத் தவறியதாக, வலைப்பதிவாளர் வான் முஹமட் அஸ்ரி வான் டெரிஸ் மீது இன்று, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
42 வயதான பாபாகோமொ என்றழைக்கப்படும் வான் முஹமட் அஸ்ரி மீதான குற்றச்சாட்டு, மஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா காளிசான் முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர் அதனை மறுத்து விசாரணைக் கோரினார்.
வழக்கு எண் 23NCVC-37-03/2013-க்கு விதிக்கப்பட்ட சம்மன் தொகையை செலுத்த, பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வணிகத்தின் பதிவு செய்யப்பட்ட விவரங்களின் மாற்றங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாக, Invoice Solutions நிறுவனத்தின் பொறுப்பாளரான பாபாகோமொ மீது குற்றம் சுமத்தப்பட்டது.
2017-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
2,500 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் பாபாகோமொ வை விடுவிக்க அனுமத்தித்த நாடாளுமன்றம், இவ்வழக்கை அடுத்தாண்டு ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)