சிரம்பான், டிசம்பர் 20 (பெர்னாமா) -- இந்தோனேசியா, மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா மற்றும் ஆச்சேவில் வெள்ளப் பேரிடர் மற்றும் நிலச்சரிவின் அண்மைய நிலவரத்தை மேடானில் உள்ள மலேசிய தூதரகம் வழியாக வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து கையாண்டு வருகிறது.
நேற்று வரையில் வெள்ளத்தினால் மலேசியர்கள் எழுவர் சிக்கித் தவிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஒருவரை இன்னும் காணவில்லை என்றும் அறுவர் பாதுகாப்பாக வீடு திரும்பியதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
''ஆச்சேவில் சம்பந்தப்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டு நாட்டிற்குத் திரும்பி விட்டனர். சாதாரண மக்கள் வந்துவிட்டனர். மாணவர்கள் சிலர் உள்ளனர். 15 பேர். சிலர் வந்துவிட்டனர். சிலர் இன்னும் அங்கேயே தங்க விரும்புகிறார்கள். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்'', என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான்.
இன்று பேர்டான தாமான் பிங்கிறான் சேனாவானில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் முஹமட் ஹசான் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக நவம்பர் 27ஆம் தேதி இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவின் பாடாங் பஞ்சாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலேசியரான 30 வயதுடைய அஸ்ருள் நிசாம் அப்ரிடிவ்சன் காணாமல் போயிருக்கலாம் என்று நம்பப்படுவதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.
இதனிடையே ஆச்சே அவில் உள்ள 49 மலேசிய மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 24 பேர் இன்னும் அங்கேயே இருக்கும் வேளையில் டிசம்பர் 16ஆம் தேதி வரை 25 பேர் பாதுகாப்பாக நாடு திரும்பியதாக முஹமட் ஹசான் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)