பொது

மின் விலைப்பட்டியல் முறை; அமல்படுத்தப்பட்டதிலிருந்து 82 கோடியே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவைப் பெறப்பட்டுள்ளன

22/12/2025 05:43 PM

சைபர்ஜெயா, டிசம்பர் 22 (பெர்னாமா) -- E-INVOIS எனப்படும் மின் விலைப்பட்டியல் முறை அமல்படுத்தப்பட்டதிலிருந்து உள்நாட்டு வருமான வரி வாரியம் எல்.எச்.டி.என் 111,600 வரி செலுத்துபவர்களிடம் இருந்து 82 கோடியே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட E-INVOISசைப் பெற்றுள்ளது.

E-INVOISசைத் தன்னார்வ முறையில் அமல்படுத்தும் நான்காம் கட்ட வரி செலுத்துபவர்கள் உட்பட கட்டாயம் அம்முறையைப் பயன்படுத்தும் முதலாவது தொடங்கி மூன்றாம் கட்ட வரி செலுத்துபவர்களை அத்தொகை உள்ளடக்கி இருப்பதாக எல்.எச்.டி.என் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின் தெரிவித்தார்.

நான்காம் கட்ட E-INVOIS முறை 50 லட்சம் ரிங்கிட் வரைக்குமான வருமானம் அல்லது ஆண்டு விற்பனையைப் பெறும் வரி செலுத்துபவர்களை உள்ளடக்கி 2026ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கவிருக்கிறது.

''முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தின் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது. எங்கள் மூன்றாம் கட்டம் இன்னும் நிறைவடையவில்லை. ஆனால் முதல் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களிலில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டைக் கடந்துவிட்டது'', என்றார் டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின்.

இன்று சைபர்ஜெயாவில் வர்த்தக சங்கத்துடனான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)