புத்ராஜெயா, டிசம்பர் 24 (பெர்னாமா) -- அண்மையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த கூடுதல் ஒதுக்கீடுகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து 35 லட்சத்து 40 ஆயிரம் சம்பவங்களை உட்படுத்தி கூடுதலாகச் செலுத்தப்பட்ட ஆயிரத்து 800 கோடி ரிங்கிட்டை உள்நாட்டு வருமான வரி வாரியம் LHDN இவ்வாண்டு டிசம்பர் 22ஆம் தேதி வரையில் திரும்பச் செலுத்தியுள்ளது.
அதேவேளையில் இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து டிசம்பர் எட்டாம் தேதி வரையில் 35 லட்சத்து 20 ஆயிரம் சம்பவங்களை உட்படுத்தி ஆயிரத்து 500 கோடி ரிங்கிட் நிதியை அவ்வாரியம் திரும்பச் செலுத்தியது.
டிசம்பர் ஒன்பது தொடங்கி 15ஆம் தேதி வரை 6,480 சம்பவங்களை உட்படுத்தி 100 கோடி ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் LHDN தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 16இல் இருந்து 18ஆம் தேதி வரை 1,339 சம்பவங்களை உட்படுத்தி 100 கோடி ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது.
டிசம்பர் 19 தொடங்கி 22ஆம் தேதி வரை 13,111 சம்பவங்களை உட்படுத்தி 100 கோடி ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது.
பிரதமர் அறிவித்த 400 கோடி ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டிலிருந்து இவ்வாண்டு டிசம்பர் ஒன்பது தொடங்கி 22ஆம் வரை 20,930 சம்பவங்களை உட்படுத்தி 300 கோடி ரிங்கிட் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டதாக LHDN கூறியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)