சிரம்பான், டிசம்பர் 24 (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட Op Luxury சோதனை நடவடிக்கை வழி இரண்டு கோடியே 10 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 106 சொகுசு வாகனங்களை அம்மாநில சாலைப் போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே கைப்பற்றியுள்ளது.
காலாவதியான மோட்டார் வாகன உரிமம் வாகன காப்பீட்டு இல்லாதது மற்றும் காலாவதியான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அந்த பறிமுதல் மேற்கொள்ளப்பட்டதாக மாநில ஜே.பி.ஜே இயக்குநர் ஹனிஃப் யுசாப்ரா யுசுஃப் தெரிவித்தார்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹனிஃப் யுசாப்ரா யுசுஃப் கூறினார்.
''இந்த சோதனை நடவடிக்கையில் 35 முதல் 55 வயதுக்குட்பட்ட வாகன உரிமையாளர்கள் அடங்குவர். அவர்களில் பெரும்பாலோர் தொழிலதிபர்கள், விற்பனை நிர்வாகிகள் மற்றும் மேம்பாட்டாளர்கள். மேலும் நாங்கள் அடையாளம் கண்டுள்ள நபர்களில் டத்தோ அந்தஸ்துள்ள தொழிலதிபர் ஒருவரும் அடங்குவார்'', என்றார் ஹனிஃப் யுசாப்ரா யுசுஃப்.
இச்சோதனை நடவடிக்கையில் சாலை வரி இல்லாதது காலாவதியான சாலை வரி வாகன உரிமக் குற்றங்கள் மற்றும் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், சட்டம் 333இன் கீழ் பிற குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 318 அறிவிக்கைகளும் வெளியிடப்பட்டன.
சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத அல்லது சாலை வரி செலுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்கும் சொகுசு வாகனங்களைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கை தேசிய அளவில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்று ஹனிஃப் யுசாப்ரா குறிப்பிட்டார்.
MyJPJ செயலி அல்லது மின்னஞ்சல் aduantrafik@jpj.gov.my போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் MyJPJ செயலி அல்லது aduantrafik@jpj.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று ஹனிஃப் யுசாப்ரா அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)