பேராக், 25 டிசம்பர் (பெர்னாமா) -- பத்து காஜாவில் உள்ள 97 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்று சிறப்புமிக்க செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் இளைஞர்களின் ஈடுபாட்டின் மூலம் மேலும் சிறப்புற்றது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் மட்டுமல்லாமல், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினரிடையே அன்பு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளைப் புகட்டுவதற்கான தளமாகவும் செயல்படுவதாக அத்தேவாலயத்தின் இளைஞர் பிரிவித் துணைத் தலைவர் ஜெ. ரெஜினா தெரிவித்தார்.
இதனிடையே, கிறிஸ்துமஸ் திருநாளுக்கான் வழிபாடுகளில் கலந்துகொண்டப் பின்னர் குடும்பம், நண்பர்களுடன் இக்கொண்டாட்டத்தைத் தொடரவிருப்பதாக, செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தின் இளைஞர் பிரிவி உறுப்பினர் ஆர். சத்திய ரூபன் கூறினார்.
ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட கிருஸ்துமஸ் தினத்திற்கான சிறப்பு பிராத்தனை பீடத்தை அலங்கரிக்கும் பணியில் சுமார் 20 இளைஞர்கள் ஈடுபட்டனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]