பொது

இனிதே தொடங்கியது 2026

01/01/2026 08:03 PM

பத்துமலை , ஜனவரி 01 (பெர்னாமா) -- புதிய ஆண்டான 2026ஆம் ஆண்டு, இன்று வியாழக்கிழமை இனிதே தொடங்கி இருக்கிறது.

பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் புதிய திட்டங்கள், மேற்கல்வி, வேலை, பண வரவு உட்பட அனைத்து விதமான ஆசைகளையும் தீர்மானமாகக் கொண்டு அதை நிறைவேற்றுவதற்கான எதிர்பார்ப்புகளுடன் மக்கள் இந்நாளை தொடங்கி இருப்பர்.

அந்த எதிர்பார்ப்புகளுக்கான தொடக்கப் புள்ளியாக, பெரும்பாலோர் இன்று காலையில் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் பத்துமலை திருத்தலத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய ஆண்டை இந்த ஆலயத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்ற உற்சாகத்தில் அதிகமான மக்கள் இன்று அங்கு கூடி இருந்தனர்.

2025ஆம் ஆண்டுக்கு விடைக் கொடுத்த நிலையில், இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை கொண்டு வர வேண்டும் என்பது வழக்கம் போலவே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே, இப்புதிய ஆண்டை உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்ற இளைஞர்கள் தங்களின் கல்வி குறித்த தீர்மானங்களை கூறினர்.

புத்தாண்டை வரவேற்கும் இவ்வேளையில், நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றும், சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)