உலகம்

டெல்சியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தொடர்பில் இருந்தார்

04/01/2026 07:43 PM

வாஷிங்டன் டி.சி, ஜனவரி 04 (பெர்னாமா) -- மதுரோவின் வாரிசு என்று நம்பப்படும் வெனிசுலா துணை அதிபர் 

டெல்சி ரோட்ரிகியுசுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ தொடர்பில் இருந்ததாகவும் அவர் அதிபராகப் பதவியேற்றதாகவும் மார்-ஆ-லாகோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார். 

''வெனிசுலா மக்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு குழு வெனிசுலாவை நாம் வைத்திருப்பதை உறுதி செய்யப் போகிறது இல்லையா? ஏனெனில் நாம் வெளியேறினால் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? அதாவது பொறுப்பேற்க யாரும் இல்லை. மடுரோவால் நியமிக்கப்பட்ட துணை அதிபர் ஒருவர் உங்களிடம் இருக்கிறார். இப்போது ​​அவர் துணை அதிபர். அவர் தான் அதிபர் என்று நினைக்கிறேன். அவர் சிறிது நேரத்திற்கு முன்பு அதிபராகப் பதவியேற்றார். அவர் மார்கோவுடன் நீண்ட நேரம் உரையாடினார். உங்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்வோம் என்று அவர் கூறினார். அவர் மிகவும் கருணையுள்ளவர் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் அவருக்கு வேறு வழியில்லை'', என்றார் டோனல்ட் டிரம்ப்.

12 ஆண்டுகளுக்கும் மேலாக வெனிசுலாவைக் கடுமையாக ஆட்சி செய்த மதுரோவின் பதவி நீக்கம் லத்தின் அமெரிக்க நாட்டில் அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இவ்வேளையில் வெனிசுலாவின் உள்கட்டமைப்பை மீண்டும் சீரமைக்க கால அவகாசம் தேவை என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)