புத்ராஜெயா, ஜனவரி 05 (பெர்னாமா) -- பிரதமரின் அந்த அறிவிப்பு அரசாங்கக் கொள்கை அமலாக்கத் திசையின் தெளிவான சமிக்ஞையாக மட்டுமின்றி வணிகத் துறை மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்புகளின் கருத்துகளைப் பரிசீலிக்கவிருக்கும் அரசாங்கத்தின் தயார் நிலையையும் பிரதிபலிப்பதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
மேலும், நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கக் கொள்கைகளைச் செயல்படுத்துதல் மற்றும் தெளிவான தொலைநோக்கு அம்சங்களும் ஒத்துப் போவதாகவும் அவர் கூறினார்.
"இந்த அறிவிப்பினால் பலவற்றிற்குக் குறிப்பாக வணிக சமூகத்தினரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும், கல்வியைப் பொறுத்தவரை மட்டுமல்ல ஒவ்வொரு வகை பள்ளிக்கும் பயனளிக்கும் பல அறிவிப்புகள் இல்லாவிட்டாலும் பள்ளி உள்கட்டமைப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தும் செயல்முறையைத் துரிதப்படுத்தும் பல ஒப்புதல்களும் உள்ளன", என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறையுடனான மாதாந்திர சந்திப்பு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான பிரதமரின் உரை நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபஹ்பி அரசாங்கத்தின் இந்நடவடிக்கை பல்வேறு துறைகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)