இந்தியா, 13 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த வாரம் அடையப்பட்ட இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பைக் கண்டித்து, இந்திய விவசாயிகளும் தொழிலாளர் சங்கங்களும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த ஒப்பந்தம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தகம் தொடர்பான இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை எட்டியதாக இந்தியாவும் அமெரிக்காவும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
துணிமணிகள், தோல், காலணிகள், நெகிழி, ரப்பர், கரிம இரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் சில இயந்திரங்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளி பொருட்களுக்கு அமெரிக்க தரப்பு 18 விழுக்காட்டு பரஸ்பர வரி விகிதத்தை விதிக்கலாம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தரப்பும் இந்தக் கட்டமைப்பை உடனடியாகச் செயல்படுத்தி, இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்குச் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களுக்கு வழிவிடுவது, இந்தியாவில் ஏற்கனவே போராடி வரும் விவசாயத் துறையை மேலும் நெருக்கடியில் தள்ளும் அபாயம் இருப்பதாக இந்திய விவசாயிகள் எச்சரித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)