இஸ்ரேல், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல் அபாயம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று புதன்கிழமை இஸ்ரேலை சென்றடைந்தார்.
மோடியின் இப்பயணத்தை, இந்தியாவும் இஸ்ரேலும் தங்கள் உறவுகளை ஆழப்படுத்த ஒரு வாய்ப்பாக கருதுகின்றன.
''மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, நமது நவீன பங்காளித்துவத்துக்கு வலிமை அளிக்கும் பகிரப்பட்ட இலட்சியங்கள் ஆழமான அடித்தளங்களாகும். நாம் வரலாற்றால் வடிவமைக்கப்பட்ட ஜனநாயக நாடுகள் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்டவை. நமது பங்காளித்துவம் பகிரப்பட்ட அனுபவம் மற்றும் பகிரப்பட்ட விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டது. நமது வலுவான பங்காளித்துவம் தேசிய நலன்களுக்கு சேவை செய்வது மட்டுமல்லாமல், உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கும் பங்களிக்கிறது,'' என்றார் நரேந்திர மோடி.
இந்திய வரலாற்றில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் பிரதமர் மோடி ஆவார்.
2017ஆம் ஆண்டில், பென்ஜமின் நேட்டன்யாஹு இஸ்ரேலியப் பிரதமராக இருந்தபோது மோடி பயணம் மேற்கொண்டிருந்தார்.
பின்னர், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி மீண்டும் அங்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவ்விரு தலைவர்களும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]