பொது

1,048 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு பத்து கோடியே 23 லட்சத்திற்கும் மேலான நிதி விநியோகம்

22/02/2026 06:36 PM

தைப்பிங், 22 பிப்ரவரி (பெர்னாமா) --  RIBI எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் வளர்ச்சிக்காக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 48 வழிபாட்டுத் தலங்களுக்கு 10 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் நிதியை வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு அங்கீகரித்துள்ளது.

உள்ளடக்கம், பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளுக்கு இணங்க RIBI-யை ஒரு முக்கிய சமூக நிறுவனமாகப் பாதுகாப்பதற்கான மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிப்பதாக அதன் அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்களை வெறும் கட்டமைப்புகளாக மட்டும் பார்ப்பதற்கு இல்லை, மாறாக உன்னத மதிப்புகள், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதற்கான மையங்களாக அவை வளக்கப்படுவதாக ஙா கூறினார்.

சனிக்கிழமை தைப்பிங்கிற்கான தமது பணிப் பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக அவர் அவ்வாறு கூறினார்.

1905ஆம் ஆண்டு கட்டப்பட்ட நாட்டின் முதல் Methodist வழிபாட்டுத் தலமான தைப்பிங்கில் வீற்றிருக்கும் ஒரு சீன மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு இரண் டு லட்சத்து 50,000 ரிங்கிட் நிதியை வழங்குவதாக அவர் அறிவித்திருந்தார்.

சேதமடைந்த மரத் தளங்களை மாற்றுதல், புதிய கூரைகளை நிறுவுதல், மீண்டும் சாயம் பூசுதல் மற்றும் மின்சார கம்பிகளை சரிசெய்தல் ஆகியவற்றிற்காக அந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஙா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)