பொது

இரு புதிய பொறுப்பாளர்களுக்கு ஃபஹ்மி வாழ்த்து

23/02/2026 05:27 PM

கோலாலம்பூர், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசிய ஒளிபரப்புத் துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் அஷ்வாட் இஸ்மாயிலுக்கும், வியூக ஒளிபரப்பு பிரிவின் துணை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஷரிஃபா அட்லினா ஷேட் அப்துல்லாவுக்கும் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃப்ஹமி ஃபட்சில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

அவர்களின் தலைமைத்துவம் நாட்டின் ஒளிபரப்புத் துறையை வலுப்படுத்தி புதுமைகளை ஊக்குவிக்கும் என்று  ஃப்ஹமி நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய ஒளிபரப்புத் துறையில் சுமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் பிப்ரவரி 22-ஆம் தேதி ஓய்வு பெற்ற டத்தோ சுஹாய்மி சுலைமானுக்குப் பதிலாக, 40 வயதான அஷ்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஷ்வாட் முன்னதாக ஆஸ்ட்ரோ அவானியில் சுமார் 19 ஆண்டுகளாக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)