பொது

ஏ.ஐ உடன் தொடர்பில்லாத தரவு மையங்களின் நுழைவை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது

24/02/2026 04:14 PM

ஜாலான் பார்லிமன், 24 பிப்ரவரி (பெர்னாமா) --  நாட்டின் எரிசக்தி கட்டமைப்பு மற்றும் நீர் விநியோகத்தில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ உடன் தொடர்பில்லாத புதிய தரவு மையங்கள் அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் கடந்த ஈராண்டுகளாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

தரவு மையங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து, எரிசக்தி மற்றும் நீரின் பயன்பாடு அதிகரித்த போதிலும் மலேசியா தற்போது போதுமான விநியோகத்தை உறுதிச்செய்யும் திறனைக் கொண்டிருப்பதை கணிப்புகள் காட்டுவதாக பிரதமர்  டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''உயர் தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ சேர்ப்பதன் அடிப்படையில் நன்மைகள் இருந்தால், அதை அங்கீகரிப்பது எளிதாகும். எனவே தொடர்பில்லாத அனைத்து புதிய பயன்பாடுகளும், மலிவான நீர் வசதிகள் மற்றும் மலிவான விலையைப் பயன்படுத்துவதால், தரவு மையங்களாக மட்டுமே உள்ளன. அவை ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன'', என்றார் அவர்.

இன்று, மக்களவையில் அமைச்சரின் கேள்வி பதில் நேரத்தின் போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கருத்துரைத்தார்.

நீண்ட காலத்திற்கு ஆசியான் எரிசக்தி கட்டமைப்பைப் பயன்படுத்துவது மற்றும் சரவாக்கிலிருந்து தீபகற்ப மலேசியாவிற்கு விநியோகங்களை மாற்றும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)