ஜாலான் டூத்தாமாஸ் 2, 24 பிப்ரவரி (பெர்னாமா) -- நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வை, அரசாங்கம் எந்த காலக்கட்டம் வரையில் ஏற்கும் அல்லது ஒத்திவைக்கும் என்பது குறித்த எந்தவொரு முடிவையும் அமைச்சரவை செய்ய வேண்டும்.
ஏனென்றால், அவ்விவகாரம் நிதி தாக்கங்களையும் ஒட்டுமொத்த அரசாங்க கொள்கையையும் உள்ளடக்கி இருப்பதாக, பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
மக்களின் சுமையைக் குறைக்க, தற்போதுள்ள டோல் கட்டணங்கள் அதிகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்யும் நோக்கத்துடன், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக, அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
“அரசாங்கம் மறுசீரமைப்பு மற்றும் மறுஆய்வு செய்வதைத் தடுத்து நிறுத்துவதன் முக்கிய நோக்கம், மக்கள் தற்போது செலுத்தி வரும் டோல் கட்டண விகிதங்கள் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்பதே என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், ஒப்பந்தத்தின் படி அனுமதிக்கப்படாதது, டோல் கட்டண விகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதாவது, டோல் கட்டணம் அதிகரிக்கும்”, என்றார் அவர்.
இன்று, மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம், CIDB-இல் நடைபெற்ற CAP30 எனப்படும் 2026-2030-ஆம் ஆண்டு வரையிலான கட்டுமான செயல் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)