பொது

ஏரியில் குதித்த இந்தோனேசியப் பெண் நீரில் மூழ்கி மரணம்

10/03/2026 05:06 PM

ஶ்ரீ கெம்பாங்கான், 10 மார்ச் (பெர்னாமா) -- நேற்று மாலை செராசில் உள்ள பூங்கா ஏரியில் குதித்த இந்தோனேசியப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தூதரக தரப்பிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அவர் ஏரியில் குதித்ததாக நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மாலை மணி 4.35 அளவில் தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

முதலில், நீரின் மேற்பரப்பில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் இரவு மணி 10.10-க்கு நீர் மீட்புக் குழுவினர் நீரில் மூழ்கித் தேடுதலை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் 30 வயதுடைய அப்பெண்ணின் சடலம், ஒன்பது நிமிடங்கள் கழித்து ஏரிக்கரையிலிருந்து சுமார் ஆறு மீட்டர் தூரத்தில், மூன்று மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் நடவடிக்கைகளுக்காக அவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)