உலகம்

ஈரான் மீதான போர் விரைவில் நிறைவு பெறும் - டிரம்ப்

10/03/2026 05:10 PM

புளோரிடா, 10 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் மீதான இராணுவத் தாக்குதல், விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஈரானின் இராணுவம் வலுவிழந்து காணப்படுவதால், போர் விரைவில்  முடிவுக்கு வரும் என்று அவர் கூறியிருக்கிறார்.

''நாங்கள் எங்கள் ஆரம்ப காலக்கெடுவை விட நிறைய முன்னால் இருக்கிறோம். ஒரு மாதத்திற்குப் பிறகு நாங்கள் இங்கு இருப்போம் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று நான் கூறுவேன். கூடுதலாக, நாங்கள் இரண்டு மற்றும் மூன்று முறை தலைமையை அகற்றியுள்ளோம்,'' என்று அவர் தெரிவித்தார்.

ஈரான் மீதான போர் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் போர் நிறைவு பெறும் டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார்.

ஈரானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை திறன்களை அமெரிக்கா தொடர்ந்து குறிவைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால், ஈரான் வலுவிழந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு நிலவரத்தில், ஹொர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகத்தை தெஹ்ரான் நிறுத்தினால், ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்படும் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)