கோலா நெருஸ், 15 மார்ச் (பெர்னாமா) -- ரெடாங் தீவில், பாசீர் அகார் மெரின் பூங்காவில் முக்குளிக்கும் போது காணாமல் போனதாக சந்தேகிக்கப்பட்ட இரு முக்குளிப்பாளர்கள் நேற்றிரவு பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஷஹிமி சைனால் அபிடின் மற்றும் டான் யங் சொங் எனும் அவ்விரு ஆடவரும் இரவு 9.45 மணியளவில் காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள யூ தீவு அருகே முக்குளிப்பாளர்களால் மீட்கப்பட்டனர்.
சுமார் 12 மணி நேரமாக கடலில் மிதந்த அவ்விருவரும் பலவீனமாக காணப்பட்டதாக, கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முஹமட் நோர் தெரிவித்தார்.
அவ்விருவரில் ஒருவர் உள்நாட்டினர் என்றும், மற்றொருவர் சீன நாட்டினர் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.
பாதிக்கப்பட்ட இருவரும் ரெடாங் தீவு சுகாதார சிகிச்சையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக செத்தியு மருத்துவமனைக்கு அனுப்பட்டனர்.
அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)