பொது

நோன்பு பெருநாள்: தூய்மையைக் கண்காணிக்க SWCORP-இன் 300 பணியாளர்கள் 

18/03/2026 04:59 PM

ஷா ஆலம், 18 மார்ச் (பெர்னாமா) -- நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பகுதிகள் மற்றும் பொதுச் சாலைகளில் தூய்மையைக் கண்காணிப்பதையும், அவற்றின் அமலாக்கத்தையும் தீவிரப்படுத்துவதற்காக, திடக்கழிவு நிர்வகிப்பு மற்றும் பொது அமைப்பு, SWCorp-ஐ சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அமலாக்க அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

அந்த அமலாக்கக் குழு, சாலை மற்றும் ஆர்&ஆர் ஓய்வு தளத்தில் தூய்மையைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தவிருப்பதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக, பெருநாள் காலம் முழுவதிலும், சாலைகளை 'குப்பைத் தொட்டிகளாக' மாற்ற வேண்டாம் என்று ஙா பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

''இம்முறையும் நோன்பு பெருநாளை முன்னிட்டு நிலைமையைக் கண்காணிப்பதற்காக SWCorp-இன் கூடுதலாக 300 அமலாக்கப் படையினர் பணியில் ஈடுபடுவார்கள். இடங்களை நாங்கள் அறிவிப்போம். நிச்சயமாக, சட்ட அமலாக்கம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், நமக்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை. இது அரசாங்கத்தின் கடப்பாடு மட்டுமல்ல. இது நம் அனைவரின் பொறுப்பு,'' என்றார் அவர். 

இன்று, செக்‌ஷன் 13-ல் உள்ள AEON ஷா ஆலம் பேரங்காடியில், தேசிய அளவிலான ‘Sort & Drop - Recycle The Cartons’ நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]