விளையாட்டு

லிவர்பூல் அணியில் இருந்து விடைபெறும் முஹமட் சலா

25/03/2026 04:28 PM

லண்டன், 25 மார்ச் (பெர்னாமா) -- இந்த பருவம் நிறைவடைந்தவுடன் லிவர்பூல் அணியுடனான தமது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக அக்கிளப்பின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரர் முஹமட் சலா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், லிவர்பூல் அணியுடனான அவரின் சுமார் பத்தாண்டுக் கால வெற்றிப் பயணம் முடிவுக்கு வரவுள்ளது.

முன்னர் கையெழுத்திடப்பட்ட மீதமுள்ள ஒப்பந்தத்தைத் தொடர வேண்டாம் என இரு தரப்பினரும் ஒர் உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், சாலாவின் அந்த அறிவிப்பையும் லிவர்பூல் உறுதிப்படுத்தியது.

எகிப்தைச் சேர்ந்த சாலா 2017-ஆம் ஆண்டு லிவர்பூல் அணிக்காக விளையாடத் தொடங்கினார். 

அன்று முதல், 435 போட்டிகளில் 255 கோல்களை அடித்து, அந்த அணியின் அதிக கோல் அடித்த ஆட்டக்காரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, 2019 UEFA கிண்ணம், எஃப்ஏ கிண்ணம் உள்ளிட்ட பல போட்டிகளில் லிவர்பூல் வென்ற வெற்றிகளுக்கு சாலா பங்களித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)