புத்ராஜெயா, 26 மார்ச் (பெர்னாமா) -- மலேசியா மற்றும் சீனாவின் வளப்பம் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தூதரக உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதிப்பூண்டுள்ளன.
இவ்வாண்டு முதல் முறையாக மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் செ யிசின் என்பவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தப் போது இது குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியாவின் பங்காளி நாடு என்ற முறையில், சீன அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் இங்கு வருகை தந்திருப்பதை தமது அரசாங்கம் பாராட்டுக்குரிய ஒன்றாக, பார்ப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது முகநூல் பதிவின் வழி தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நீட்டிப்பது குறித்தும் அவர்களின் சந்திப்பில் பேசப்பட்டது.
மேலும், மக்களும் அனுபவித்து வரும் சமூக மற்றும் பொருளாதார வளம் எப்போது பேணப்படுவதிலும் இரு நாடுகள் உறுதியாக உள்ளன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]