கோலாலம்பூர், 27 மார்ச் (பெர்னாமா) -- விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கும் பொருட்டு, பட்டாசு விற்பனை தொடர்பான உரிமம், விற்பனை அளவுகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட நிலையான செயல்பாட்டு தர விதிமுறைகளை மறுஆய்வு செய்யுமாறு சிலாங்கூரில் உள்ள ஊராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பண்டிகை காலங்கள் எந்தவித விபத்துகளும் இன்றி பாதுகாப்பான சூழலில் கொண்டாடப்படுவதற்கும் இந்நடவடிக்கை அவசியம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங் சூ லிம் தெரிவித்திருக்கிறார்.
''விபத்துகள் நிகழ்வதைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணவும் இது அவசியம். பட்டாசுகளை வெடிக்கும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்த ஊராட்சி மன்ற கூட்டத்தில், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து நாம் கவனமாக இருப்பதற்கும், முடிந்தால் விபத்துகளைக் குறைப்பதற்கும் கடுமையாக்கப்பட வேண்டிய செயல்பாட்டுத் தர விதிமுறைகளைக் குறித்தும் விவாதிப்போம்,'' என்றார் அவர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]