பொது

பல்வேறு குற்றங்களுக்காக பி.டி.ஆர்.எம்-ஐ சேர்ந்த 1,869 உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

07/09/2024 06:57 PM

பாங்கி, 07 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்-ஐ சேர்ந்த மொத்தம் 1,869 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு குற்றங்களுக்காக ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த எண்ணிக்கையில், மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருளை தவறாக பயன்படுத்தியது மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக 175 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

''அதிகமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களின் நடவடிக்கைகள் சீரானதாகவும், தொடர்ச்சியாகவும் உள்ளன. எந்த அதிகாரி மற்றும் உறுப்பினர் தவறான நடத்தையில் ஈடுபட்டாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்,'' என்றார் அவர். 

இன்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான தன்னார்வ போலீஸ் பயிற்ச்சியை நிறைவு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]