உலகம்

யாகி சூறாவளியால் வியட்நாம் மக்கள் பாதிப்பு

09/09/2024 06:57 PM

யென் பெய், 09 செப்டம்பர் -- (பெர்னாமா) வியட்நாமில், யாகி சூறாவளியால் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றைத் தொடர்ந்து, பூ தோ மாகாணத்தில் பயன்பாட்டில் இருந்த பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. 

இச்சம்பவத்தில், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகாத நிலையில், மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை வியட்நாமை தாக்கிய யாகி சூறாவளியினால், இதுவரை மரண எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 299 பேர் காயமடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு பின்னர், வியட்நாமைத் தாக்கி இருக்கும் இந்த வலுவான சூறாவளியினால், தொடர் கனமழை பெய்து வருகின்றது. 

இதனால், பல இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சா பா நகரில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கைக்குழந்தை உட்பட அறுவர் உயிரிழந்ததோடு,  ஒன்பது பேர் காயமடைந்தனர்.

அதிகாரிகளின் மறு அறிவிப்பு வரும் வரை அங்கு உள்ளூர் சுற்றுலா நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

குவாங் நேஹ் மற்றும் ஹயிபோங் மாகாணங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)