பொது

பொருளாதார மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது

10/09/2024 05:47 PM

ஜாலான் பினாங்கு, 10 செப்டம்பர் (பெர்னாமா) --  மடானி பொருளாதாரக் கட்டமைப்பு மூலம், முதலீடு மற்றும் புத்தாக்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவதோடு பொருளாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டு, கலாச்சாரம், கல்வி மற்றும் தொழில்துறைகளில் சீன சமூகத்தின் பங்களிப்பை அரசாங்கம் எப்போதும் அங்கீகரித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கின்றார்.

''மலேசியா பல இனங்கள் வாழும் நாடு. ஆனால், இதனை நமது பலமாகப் பயன்படுத்துவதற்கு அல்லது இந்தக் குறியீடு மற்றும் வேறுபாடுகளை தொடர்ச்சியாக காட்டுவதற்கு நாம் ஒரு தேர்வு செய்ய வேண்டும்,'' என்று கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 17ஆவது உலக சீன தொழில்முனைவோரின் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றியப் போது அன்வார் அதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் ஒரு கொள்கையை வகுத்திருந்தாலும், முதலீடு மற்றும் புத்தாக கண்டுபிடிப்புகளுக்கு உகந்த சூழலை வலுப்படுத்தும் பங்களிப்பையும் அது சார்ந்திருப்பதாக அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)