உலகம்

காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடியில் ஜெனின் அகதிகள்

14/09/2024 07:54 PM

மேற்குக்கரை, 14 செப்டம்பர் (பெர்னாமா) -- காசா பகுதியில் தண்ணீர், மின்சாரம் மற்றும் தங்குமிட வசதிகள் இல்லாததால், மேற்கு கரையின் ஜெனின் நகர அகதிகள், மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதோடு, அப்பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையையும் எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த 1953-ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்குப் போரினால் புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில், ஜெனினின் மேற்கு புறநகர் பகுதியில் 0.5 சதுர கிலோமீட்டருக்கும் குறைவான பரப்பளவைக் கொண்ட அகதிகள் முகாம் அமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், சுமார் 20 ஆயிரம் பேர் தங்கக்கூடிய முகாமாக மாற்றம் கண்டிருந்தாலும் அழிவும் தாக்குதலும் தொடர்கின்றன.

இவ்வாண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6-ஆம் தேதி வரை ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 14 உள்நாட்டினர் கொல்லப்பட்டனர்.

பல சாலைகள், கட்டிடங்கள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)