உலகம்

மின்னணு சாதனங்களை குறிவைத்து லெபனானில் இரண்டாம் அலை தாக்குதல்

19/09/2024 07:55 PM

பால்பெக், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- லெபனானில் மின்னணு சாதனங்களை குறிவைத்து நடந்த இந்த இரண்டாம் அலை தாக்குதலில் 9 பேர் பலியான வேளையில், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

'பேஜர்' (Pager) எனப்படும் தொலைத் தொடர்பு சாதனங்கள் வெடித்த சம்பவத்தைத்தை தொடர்ந்து அங்கு வாக்கி டாக்கி எனும் கையடக்க தொலைத் தொடர்பு உபகரணங்களும் வெடித்து சிதறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் மீது அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹெஸ்பொல்லா இயக்கம் அடிக்கடி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஹெஸ்பொல்லா தரப்பு பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பேஜர்கள், செவ்வாய்க்கிழமை வெடித்துச் சிதறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த இந்த இரண்டாம் அலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதில், ஒன்பது பேர் 12 பேர் பலியான நிலையில், சுமார் 3,000 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹெஸ்பொல்லா குற்றம் சாட்டியது.

ஆனால், இஸ்ரேல் அதுகுறித்துக் கருத்து தெரிவிக்கவில்லை.

இரு தரப்பினரின் இந்த மோதல்கள் முழுப் போராக விரிவடையும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு, “போர் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்வதாக அறிவித்திருந்தார்.

இதனால் லெபனான் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]