அரசியல்

மக்கோத்தா இடைத்தேர்தல்; தே.மு வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டும் - தியோ

20/09/2024 06:49 PM

குளுவாங், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டின் அரசியல் நிலைத்தன்மையுடன் இருப்பதை அந்நிய முதலீட்டாளர்களுக்கு நற்செய்தியாக வழங்கும் விதமாக மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டும்.

தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு அவ்விவகாரம் மிகவும் முக்கியமானது மட்டுமின்றி ரிங்கிட்டின் மதிப்பையும் வலுப்படுத்தும் என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

''தேசிய முன்னணி வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேண்டும். ஜோகூர் மற்றும் மலேசியாவில் அரசியல் நிலைத்தன்மை இருக்கிறது என்பதை இங்கு முதலீடு செய்யவிருக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு செய்தி தெரிவிக்க வேண்டும்,'' என்றார் அவர். 

வியாழக்கிழமை, ஜோகூர், குளுவாங், தாமான் லியான் செங்கில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின்போது தியோ அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]