அல்மோரா, 04 நவம்பர் (பெர்னாமா) -- வட இந்தியாவில் இன்று பேருந்து ஒன்று சாலையை விட்டு தடம் புரண்டு ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர்.
மேலும், பலர் காயத்திற்கு ஆளாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின்போது அப்பேருந்தில் 42 பேர் இருந்த வேளையில், இதுவரை 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அரசாங்க அதிகாரி வினீத் பால் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பேருந்தில் இன்னும் சில பயணிகள் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பலத்த காயம் அடைந்தவர்களை விமானத்தில் ஏற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மோசமான நிலையில் இருந்த அப்பேருந்து விபத்துக்குள்ளாகும்போது அதிலிருந்து தப்பியவர்கள், இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)