பொது

லெபனான் வெடிப்பு சம்பவத்தில் மல்பாட் உறுப்பினர்களுக்கு சொற்ப காயங்கள் மட்டுமே

10/11/2024 03:05 PM

கோத்தா கினபாலு, 10 நவம்பர் (பெர்னாமா) -- லெபனானில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மலேசிய பட்டாலியன் படை, மல்பாட் உறுப்பினர்கள் அறுவருக்கும் சொற்ப காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

அவர்களில் ஐவர் அண்மையில் தான் லெபனானைச் சென்றடைந்த வேளையில், எஞ்சிய ஒருவர் ஏற்கனவே அங்கு சேவையாற்றி வந்ததாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

''அனைவருக்கும் (உறுப்பினர்களுக்கு) சொற்ப காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. லெபனானில் பணிபுரியும் உறுப்பினர்களின் பாதுகாப்பை அமைச்சு தொடர்ந்து உறுதிசெய்யும்,'' என்றார் அவர்.

இன்று, கோத்தா கினபாலுவில், ராணுவப்படையினரின் ராணுவ பொது ஒத்துழைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் முஹமட் காலிட் அவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த வியாழக்கிழமை, மலேசிய நேரப்படி இரவு 7.54 மணிக்கு பெய்ருட்டில் இருந்து மராகா முகாமை நோக்கி சென்று கொண்டிருந்தபோது லெபனான், சைடா அரங்கிற்கு அருகில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மல்பாட் உறுப்பினர்கள் அறுவர் காயமடைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)