பெய்ஜிங், 10 நவம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியாவுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த சீனா தயாராக இருப்பதாக அதன் அதிபர் சீ ஜின்பிங் தெரிவித்திருக்கிறார்.
சிறந்த எதிர்காலத்தை ஊக்குவிக்க இந்தோனேசியாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து சீனா பணியாற்றும் அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி சீனாவுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவுடன் சீ ஜின்பிங் சந்திப்பு நடத்தினார்.
இச்சந்திப்பில், இரு நாடுகளின் வியூக கூட்டமைப்பை வலுப்படுத்தவும் பல துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்தவும் விவாதிக்கப்பட்டன.
இந்தோனேசிய அதிபராக பொருப்பேற்றப் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக பிரபோவோ சுபியந்தோ சீனாவுக்கு சென்றுள்ளார்.
சீனாவைத் தொடர்ந்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் அவர் அலுவல் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]