பொது

வெளிப்புறத் தாக்க பாதிப்பிலிருந்து விடுபட பல்வேறு வர்த்தக உத்திகள்

04/03/2026 07:00 PM

கோலாலம்பூர், 04 மார்ச் (பெர்னாமா) -- உலகளவில், பாலஸ்தீனப் பிரச்சனையை ஆதரிப்பதில் உறுதியாக இருந்ததைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை வெளிப்புற தாக்கங்களால் பாதிக்கப்படவோ, அல்லது அழுத்தம் பெறாமலோ இருப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு வர்த்தக உத்திகளை அரசாங்கம் வகுத்து வருகிறது.

பாலஸ்தீனத்தில் மனிதாபிமான பிரச்சனைகளை எழுப்புவதில் மலேசியா வெளிப்படையாகப் பேசியதைத் தொடர்ந்து ஏற்படும், பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களின் அபாயத்தை எதிர்கொள்ள மலேசியா எந்தவொரு சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதால் இந்த அணுகுமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ லுக்கானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார். 

''வல்லரசு நாடுகளுக்கு இடையிலான உறவு மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறுதி செய்வதற்கும் வெளியுறவு அமைச்சின் பங்களிப்பை நாங்கள் உறுதி செய்வோம். எங்களிடம் மிகச் சிறந்த வர்த்தக உத்தியும் உள்ளது,'' என்றார் அவர். 

மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள மோதல்கள் குறித்து மலேசியாவின் மௌனத்தைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இன்று மக்களவையில் செனட்டர் டத்தோ பேராசிரியர் எமெரித்தஸ் டாக்டர் முஹமட் ரெட்ஸ்வான் ஒத்மான் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு Datuk Lukanisman Awang  அவ்வாறு பதிலளித்தார்.  

பாலஸ்தீனப் பிரச்சனையில் துருக்கி எடுத்த நடவடிக்கைகள் மற்றும் உறுதியான நிலைப்பாடு காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் லிரா  நாணயத்தின் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்து, அந்நாடு எதிர்கொண்ட சூழ்நிலை குறித்த உதாரணையும் அவர் முன்வைத்திருந்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]