உலகம்

ஸ்பெயின்: இரு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் புயல்

15/11/2024 04:15 PM

ஸ்பெயின், 15 நவம்பர் (பெர்னாமா) -- சுமார் 224 பேர் மோசமான வெள்ளத்தினால் உயிரிழந்த இரண்டே வாரங்களில் ஸ்பெயினில் மீண்டும் புயல் ஏற்பட்டு அதனால் கனமழையும் பெய்து வருகிறது.

அந்நாட்டின் தென் பகுதியான மலாகாவில் உள்ள அண்டலுசியா வட்டாரம் பெருமளவு சேதமடைந்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்பு குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டின் கிழக்கில் உள்ள வெலன்சியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் இதுவரை மிதமான அளவிலேயே உள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயலால் வெலன்சியாவில் மட்டும் 224 பேர் பலியான வேளையில் 16 பேரை இன்னும் காணவில்லை என்று அதன் அரசாங்கம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.

வெலன்சியாவில் மாலை வரையில் தனியார் வாகனங்களின் பயன்பாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, பல இடங்களில் பொதுப் போக்குவரத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]