கொழும்பு, 15 நவம்பர் (பெர்னாமா) -- இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி, 141 தொகுதிகளைக் கைப்பற்றி, பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டின் ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி பெரும்பான்மை கொண்ட கட்சியாகக் கருதப்படும்.
இந்நிலையில், அதிகாரப்பூர்வமற்ற தகவல் படி தேசிய மக்கள் சக்தி இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 141 தொகுதிகளை வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]