கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) -- பட்டதாரி மாணவர்களுக்கான பயிற்சி காலத்தை நீட்டிப்பது தொடர்பில், உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகத் தரப்புடன், மனிதவள அமைச்சு விவாதித்து வருகின்றது.
அந்நடவடிக்கையின் மூலம், மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, வேலைவாய்ப்பு துறையில் அவர்களின் சந்தைத் தன்மையையும் அதிகரிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர்ஸ்டீவன் சிம் சீ கியோங் கூறினாற்.
''வழக்கறிஞர் பயிற்சிக் காலம் ஒன்பது மாதங்கள் ஆகும். வேலை தொடர்பில் அவர்கள் கற்றுக் கொள்ளும் காலம் அதுவாகும். பாடங்களின் வழி அல்ல, பயிற்சிகளின் வழியாக. மருத்துவர்கள், ஓராண்டு அல்லது ஈராண்டுகள் பயிற்சி செய்ய வேண்டும். எனவே, இவை அனைத்தும் நமது மாணவர்களிடம் இருக்கும் திறன்களை மேலும் வலுப்படுத்தும்'', என்றார் அவர்.
20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பயிற்சி வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி கால ஊக்கத் திட்டம், ILHAM KESUMA, உயர்கல்வி அமைச்சு உடனான தனது ஒத்துழைப்பில் ஒன்றாகும் என்று சிம் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)