ஈப்போ,16 ஏப்ரல் (பெர்னாமா) - ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து போட்டியிடும் டாக்டர் முஹமட் யுஸ்ரி பகிர் தமது தேர்தல் வாக்குறுதியை கூடிய விரைவில் வெளியிடவுள்ளார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படும் என்று பேராக் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ சரானி முஹமட் தெரிவித்தார்.
புதன்கிழமை, ஈப்போவில் நடைபெற்ற உதவிநிதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த இடைத்தேர்தலில், தேசிய முன்னணியை பிரதிநிதித்து டாக்டர் முஹமட் யுஸ்ரி பகிர், பெரிக்காத்தான் நேஷனலின் அப்துல் முஹைமின் மாலிக் மற்றும் மலேசிய சோசலிச கட்சி பிஎஸ்எம்-இன் பொது செயலாளர் பவானி கன்னியப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)