புத்ராஜெயா, 14 ஏப்ரல் (பெர்னாமா) - சீன அதிபர் Xi Jinping நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 15 தொடங்கி 17ஆம் தேதி வரை அவர் இப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
இப்பயணத்தின்போது Xi, இஸ்தானா நெகாராவில் மாமன்னரை சந்திக்கவிருக்கிறார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சீன அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் வருகை புரியும் Xi, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்பின்போது, இருவழி ஒத்துழைப்பு, வட்டார மற்றும் அனைத்துலகப் பிரச்சனைகள் குறித்த கருத்து பரிமாற்றம் ஆகியவைத் தொடர்பிலும் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், அவ்விரு தலைவர்களும் மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்வடையும் காணவிருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)