கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) - இன்று மாலை மணி 6.30-க்கு சீன நாட்டு அதிபர் ஸி ஜின்பெங் மலேசியா வந்தடைந்தார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காம்பெலக்ஸ் பூங்கா ராயாவிற்கு வந்து சேர்ந்த அவரை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் அமைச்சரவை உறுப்பினர்களும் வரவேற்றனர்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இன்று தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை அவர் இப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
ஆகக் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டில் மலேசியாவிற்கு வந்த சீன அதிபர் , டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகிய பின்னர் மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)