புத்ரா ஹைட்ஸ், 14 ஏப்ரல் (பெர்னாமா) - எரிவாயு குழாய் வெடித்த சம்பவம் நிகழ்ந்த 12 நாட்களில், புத்ரா ஹைட்சில் உள்ள தாமான் புத்ரா ஹர்மோனி மற்றும் கம்போங் கோலா சுங்கை பாருவைச் சுத்தம் செய்யும் பணிகள் கிட்டத்தட்ட 90 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.
அந்த எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட மக்கள் வீசிய சேதமடைந்த வீட்டு பொருட்களை சுத்தம் செய்ததையும் உள்ளடக்கியுள்ளதாக KDEB Waste Management, KDEBWM நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முஹமட் தாஹிர் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த மூன்றாவது நாளில் இந்த சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது அப்பகுதியை முழுமையாக சுத்தம் செய்யும் பணிகள் தொடரப்பட்டுள்ளதோடு இவ்வாரத்தில் அது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ ரம்லி கூறினார்.
எரிந்த மரங்களை வெட்டுவது, காய்ந்த இலைகளையும் சாலைகளையும் சுத்தம் செய்வது சாலை தடுப்பை மூசிய மணலை அகற்றுவது போன்றவை அந்தத் துப்புறவு பணிகளில் அடங்கும்.
அரசாங்க நிறுவனங்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் மற்றும் தொண்டூழியர்களுடன் இணைந்து KDEBWM பொதுமக்கள் வீசிய சேதமடைந்த பொருட்களை சுத்தம் செய்ய உதவியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)