பொது

தேசிய முன்னணிக்கான ஆதரவைத் தற்காக்க வேண்டும்

30/04/2025 07:41 PM

கோலாலம்பூர், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்றதை அடுத்து வாக்காளர்களின் ஆதரவு தற்போது தேசிய முன்னணி பக்கம் மீண்டும் திரும்பியுள்ளதாக  தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறியுள்ளார். 

மக்களின் ஆதரவினை மீண்டும் தக்கவைத்து கொள்ள தேசிய முன்னணி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை  பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளதாக  மடானி அரசாங்கத்தின் பேச்சாரளருமான அவர் தெரிவித்தார். 

இளையோர்கள், மலாய் சமூகத்தின் வாக்குகள் தற்போது தேசிய முன்னணி பக்கம் திரும்பியுள்ளது இந்த இடைத் தேர்தலின் வழி கண்டயறியப்பட்டுள்ளது. 

எனவே, அந்த ஆதரவு தொடர்ந்து நிலைத்திருக்க ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று  ஃபஹ்மி ஃபட்சில் கூறியுள்ளார். 

கடந்த வாரம் நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் யுஸ்ரி 11,065 வாக்குகளில் வெற்றிப்பெற்றார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)