விளையாட்டு

பி.ஏ.எம்-இன் புதிய தலைவராக தெங்கு சஃப்ரூல் தேர்வு

10/05/2025 04:55 PM

கோலாலம்பூர், 10 மே (பெர்னாமா) -- மலேசிய பூப்பந்து சங்கம், பி.ஏ.எம்-இன் புதிய தலைவராக தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற அச்சங்கத்தில் 80-வது பொதுக் கூட்டத்தில், முதலீடு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருமான அவர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பி.ஏ.எம்-இன் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாத நிலையில், 2025-ஆம் ஆண்டு முதல் 2029-ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியை வகிப்பார்.

''தேசிய பூப்பந்து விளையாட்டை உலக அரங்கில் தொடர்ந்து சிறந்து விளங்குவதை உறுதி செய்ய முழுப் பொறுப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் இந்த நம்பிக்கையை நான் ஏற்றுக்கொள்வேன். தனியார் துறையிலும் அரசாங்கத்திலும் எனது வெளிப்புற அனுபவத்தைப் பயன்படுத்தி பி.ஏ.எம் நிர்வாகம் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதையும், பி.ஏ.எம் மலேசியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் ஓர் எடுத்துக்காட்டாகச் செயல்படும் ஒரு விளையாட்டு நிறுவனமாக மாறுவதையும் உறுதி செய்வேன்,'' என்று அவர் கூறினார்.

டத்தோ வி. சுப்ரமணியம் முதல் துணைத் தலைவராகவும், டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜஹபர்டீன் முஹமாட் யுனூஸ் இரண்டாவது துணைத் தலைவராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)