வாஷிங்டன், அக்டோபர் 09 (பெர்னாமா) -- அமெரிக்கா முன்மொழிந்திருந்த காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாசும் இணக்கம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதன் மூலம், அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லைவரை திரும்பப் பெறும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
''மத்திய கிழக்கில் ஒரு ஒப்பந்தத்திற்கு மிக அருகில் இருப்பதாகவும் அவர்களுக்கு நான் விரைவில் தேவைப்படுவதாகவும் வெளியுறவுத்துறை செயலாளரிடமிருந்து எனக்கு ஒரு குறிப்பு கிடைத்தது. எனவே நான் இன்னும் சில கேள்விகளைக் கேட்பேன்,'' என்று அவர் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் காசா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாசின் தலைவர் இறுதி முடிவை எடுப்பதற்கு எகிப்தின் உளவுத்துறை அமைச்சரைச் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, வரவிருக்கும் நாட்களில் மத்திய கிழக்கிற்குப் பயணம் செய்வது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)