பொது

மதுபானங்கள் பரிமாறப்பட்டதால் மக்கள் அதிருப்தி - அமைச்சர் மன்னிப்பு கோரினார்

09/10/2025 05:17 PM

கோலாலம்பூர், அக்டோபர் 09 (பெர்னாமா) -- அண்மையில் நடைபெற்ற குலோபல் திரெவல் மீட் (Global Travel Meet) எனும் நிகழ்ச்சியில் செய்த தமது தவற்றை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியொங் கிங் சிங் ஒப்புக்கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் மதுபானங்கள் பரிமாறப்பட்டு, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதற்கும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

அரசாங்க அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறப்படும் தடையை உறுதி செய்வதற்கான அமைச்சின் வழிகாட்டுதல்கள் குறித்து டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ஹசான் முஹமாட் ரம்லி  எழுப்பிய கேள்விக்கு தியொங் கிங் சிங் பதிலளித்தார்.

"எனவே, மூன்றாவது சுற்றறிக்கை பொருந்தாது. மேலும் மதுபானங்களை வைத்திருக்கக்கூடாது. அதிருப்தியை ஏற்படுத்தி மக்களிடையே எழுந்த குழப்பம் அல்லது தவறான புரிதலுக்கு நானும் அமைச்சும் முழுமையாக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்," என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் பொதுமக்களின் அனைத்து கருத்துகளையும் தமது அமைச்சு தீவிரமாகக் கருதுவதாகவும்  அதே நேரத்தில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விமர்சனம் மற்றும் அறிவுரையைப் கவனத்தில் கொள்வதாகவும் தியொங் கூறினார்.

இனி அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அரசாங்க வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை அமைச்சு  தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)