பொது

அக்டோபர் முதலாம் தேதி வரை இணையப் பகடிவதை தொடர்பாக 35,781 புகார்கள்

09/10/2025 05:32 PM

சிரம்பான், அக்டோபர் 09 (பெர்னாமா) -- ஜனவரி முதல் அக்டோபர் முதலாம் தேதி வரை, இணையப் பகடிவதை தொடர்பாக 35,781 புகார்கள் பெறப்பட்ட நிலையில், அது தொடர்பான 27,704 உள்ளடக்கங்களை மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி அகற்றியுள்ளது.

2024 ஆம் ஆண்டு முழுவதும் பெறப்பட்ட 11,385 புகார்களில் 8,756 உள்ளடக்கங்கள் நீக்கப்பட்ட உள்ளடக்கங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிப்பதாகத் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

''எனவே, 2024-ஆம் ஆண்டு முழுவதும் விட இந்த ஆண்டு நீக்கம் செய்யப்பட்ட உள்ளடக்கம் கிட்டத்தட்ட 3.2 மடங்கு அதிகமாக இருப்பதைக் காண்கிறோம். இது கவலைக்குரிய ஒன்று,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று நெகிரி செம்பிலான் மாநில அளவிலான பாதுகாப்பான இணையம் எனும் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்த பின்னர், தியோ செய்தியாளர்களிடம் பேசினார்.

பாதுகாப்பான இணையம் போன்ற பிரச்சாரத்தைச் செயல்படுத்து உட்பட இணையம் வழி மேற்கொள்ளப்படும் பகடிவதை அச்சுறுத்தலை எதிர்கொள்ள இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம் என்று அவர் விவரித்தார்.

இரண்டு லட்சத்து 27,000 மாணவர்களை உட்படுத்தி நாடு முழுவதும் உள்ள 4511 பள்ளிகளில் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் உள்ள அனைத்து 479 பள்ளிகளில் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)